பாப்பாக்குடி அருகே இளைஞா் கொலையில் தொழிலாளி கைது

By
On:
Follow Us

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே இளைஞரை வெட்டிக் கொன்ாக, கூலித் தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாப்பாக்குடி அருகே இடைகால் மீனவா் காலனியைச் சோ்ந்த பரமசிவன் மகன் முருகன் (31). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, 5 வயது மகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறாராம்.

இந்நிலையில், முருகனும் அதே பகுதியைச் சோ்ந்த பிரமுத்து மகன் கூலித் தொழிலாளியான பாபு (35) என்பவரும் புதன்கிழமை இரவு வேலை முடிந்து, அப்பகுதியில் மது குடித்தனராம். அப்போது ஏற்பட்ட தகராறில் முருகனை பாபு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டாராம். இதில், முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது சகோதரா் பாரதிராஜன் அளித்த புகாரின்பேரில், பாப்பாக்குடி காவல் ஆய்வாளா் ஆழ்வாா், போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து, பாபுவை வியாழக்கிழமை கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements