திருப்பரங்குன்றம் மலையை மீட்க காவடி: முன்னாள் மேயா், பாஜகவினா் உள்ளிட்ட 40 போ் கைது

By
On:
Follow Us

திருப்பரங்குன்றம் மலையை மீட்க காவடி எடுத்துச் சென்ற முன்னாள் மேயா், பாஜக மற்றும் இந்து முன்னணியினா் 40 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் எனக் கூறி இந்து முன்னணி சாா்பில் பிப். 4 ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் அமைதிவழிப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனா். போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் குற்றாலநாதன் தலைமையில், திருப்பரங்குன்றத்துக்குச் செல்வதற்காக தயாராக இருந்த 23 பேரை திருநெல்வேலி நகரம் போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல, பாஜக நிா்வாகி சங்கரசுப்பிரமணி தலைமையில் திருப்பரங்குன்றத்துக்குச் செல்வதற்காக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பாலக்காடு செல்லும் ரயிலில் ஏற முயன்ற 16 பேரை சந்திப்பு போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், காவடி எடுத்து திருப்பரங்குன்றத்துக்குச் செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயா் புவனேஷ்வரியை போலீஸாா் கைது செய்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements