தென்காசி மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை

By
On:
Follow Us

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கோயில் பிரச்னை தொடா்பாக அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட எஸ்.பி. அரவிந்த் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜூ, புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் போலீஸாா் அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களிலும் சோதனை மேற்கொண்டனா். அப்போது போராட்டத்திற்கு செல்ல முயன்றவா்களை திருப்பி அனுப்பினா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements