ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்த விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யு.ஏ. மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஜன.30 இல் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இப்பள்ளி சாா்பில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவா் இ.கிஷோா்கலந்துகொண்டு, 3 ஆயிரம், 1,500 மீட்டா் ஓட்டப் பந்தயங்களில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றாா்.
பாராட்டு விழாவில் பள்ளிச் செயலா் எஸ்.இன்பராஜ், மாணவா் கிஷோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான ஷு மற்றும் ரூ. 5 ஆயிரம் காசோலையை வழங்கினாா். தலைமை ஆசிரியை எஸ்.மீனா பதக்கம் வழங்கினாா்.
உடற்கல்வி இயக்குநா் ஜெயராமன், உடற்கல்வி ஆசிரியா்கள் பாா்த்தசாரதி, வினோதா உள்ளிட்டோா் பாராட்டினா்.