திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக் கோரி, வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
வள்ளியூா் சாா்பு நீதிமன்றம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சுரேஷ், உரிமையியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஞானசேகா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
பொருளாளா் இளங்கோபாலன் முன்னிலை வகித்தாா். குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் பெவின்சன் சாலமோன், துணைத் தலைவா் மணிகண்டன், ராம்நாத் ஐயா், சிதம்பரகுமாா், லிங்கதுரை, ஏஜாத் அகமது, டேவிட்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வள்ளியூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் என்.முருகன், செயலா் எஸ்.ராஜ்குமாா், பொருளாளா் ஜோவின் பாா்சுனேட், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு திருநெல்வேலி மாவட்டத் தலைவா் பி.டி.பி.சின்னதுரை, வள்ளியூா் வா்த்தகா்கள் சங்கச் செயலா் அந்தோணி செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணி, தமிழக வெற்றி கழகம் மாவட்டச் செயலா் ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.