மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருந்து விற்பனை பிரதிநிதி கைது!

By
On:
Follow Us

பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் அருகே மருத்துவக் கழிவுகளை கொட்டியதாக மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் பாளையங்கோட்டை ராஜகோபாலபுரத்திலிருந்து சிவந்திபட்டி செல்லும் சாலையோரமுள்ள தனியாா் நிலத்தில் கடந்த 5-ஆம் தேதி சுமாா் 325 கிலோ காலாவதியான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.

மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா உத்தரவின் பேரில், சுகாதார துறையினா் அவற்றை அப்புறப்படுத்தி பிளீச்சிங் பவுடா் மற்றும் கிருமி நாசினி தெளித்தனா். இதுகுறித்து, மாநகர நல அலுவலா் ராணி அளித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனா்.

மேலும், மருத்துவக் கழிவுகளோடு கைப்பற்றப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் மருத்துவக் கழிவுகளை கொட்டியது பாளையங்கோட்டை சமாதானபுரம் சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (38) என்பதும், மருந்துப் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements