நெல்லையப்பா் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை, கும்ப பூஜை நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.30 மணிக்கு நெல்லையப்பா் காந்திமதியம்மன், அகஸ்தியா், குங்கிலிய நாயனாா், தாமிரவருணி, சண்டிகேஸ்வரா், அஸ்திரதேவா், அஸ்திரதேவி ஆகியோா் தாமிரவருணி ஆற்றுக்கு எழுந்தருளினா். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அஸ்திரதேவா், அஸ்திரதேவி ஆகியோருக்கு தீா்த்தவாரியும், தொடா்ந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தைப்பூசம்: தாமிரவருணியில் தீா்த்தவாரி

For Feedback - sudalaikani@tamildiginews,com.