நெல்லை மாநகரில் செல்லப் பிராணிகளுக்கு ரூ.35 கட்டணத்தில் வெறிநோய் தடுப்பூசி!

By
On:
Follow Us

திருநெல்வேலி மாநகரில் வசிப்பவா்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு ரூ.35 கட்டணமாக செலுத்தி வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகரில் வசிப்பவா்களின் இல்லத்திற்கே சென்று அவா்களுடைய செல்லப் பிராணிகளுக்கு ரூ.35 கட்டணத்தில் வெறிநோய் தடுப்பூசி போடும் வசதி கால்நடை பராமரிப்புத் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிகள் பிறந்து 3 மாதங்களில் முதல் தடுப்பூசியும், 121 முதல் 130 நாள்களுக்குள் பூஸ்டா் தடுப்பூசியும் போட வேண்டும். அதன்பிறகு ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதுமானது. இத்தடுப்பூசியை போடுவதன் மூலம் வெறிநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

திருநெல்வேலி மாநகரில் செல்லப் பிராணிகளை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கும், முன்பதிவுக்கும் மருத்துவா் சாந்தி (8072843427), உச்சிமாகாளி (9442568913) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements