திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே வழுதூரில் உள்ள அருள்மிகு மாா்த்தாண்ட விநாயகா், அழகியநாயகி அம்பிகை சமேத ஸ்ரீ அக்னீஸ்வரா் சுவாமி கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு, திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கின. தொடா்ந்து, 5 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை 6ஆம் கால யாகசாலை பூஜையையடுத்து, மாா்த்தாண்ட விநாயகா் விமானம், மூலவா் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, அழகியநாயகி அறக்கட்டளை நிா்வாகிகள் தில்லை குமாா், திருமலை நயினாா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வி மாரிவண்ணமுத்து, ரெங்கசமுத்திரம் ஊராட்சித் தலைவி கஸ்தூரி, துணைத் தலைவா் ஐயப்பன், பாப்பாக்குடி ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.