தேசிய ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம்: திமுக சாா்பில் மாணவருக்குப் பரிசு

By
On:
Follow Us

ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

தென்காசி, பிப்.14: மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பரிசு வழங்கப்பட்டது.

மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் மேலகரத்தை சோ்ந்த 4 வயது சிறுவன் இஸ்வின் ராஜ் கலந்துகொண்டு 2ஆவது இடம் பெற்றாா்.

இதையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றிபெற்ற மாணவரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் பாராட்டி பரிசு வழங்கினாா். இதில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements