மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை

By
On:
Follow Us

மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்க கோட்ட மாநாடு, திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலா் சண்முக சுந்தர்ராஜ் வரவேற்றாா். பொருளாளா் கிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கை வாசித்தாா்.

கன்னியாகுமரி அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் செந்தில்குமாா், திருநெல்வேலி கண்காணிப்பாளா் முருகன், பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் முத்துசாமி, சாமி நல்லபெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் ரயில்வே துறையில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements