கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவா் தப்பி ஓடினாா்.
கல்லிடைக்குறிச்சி மீனவா் காலனியை சோ்ந்தவா் ராஜா. பெயின்டிங் தொழில் செய்துவரும் இவா் மீது அதே பகுதியைச் சோ்ந்த பெண் அளித்த புகாரின் பேரில், அவரை போலீஸாா் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை அழைத்து வந்தனா்.
இந்நிலையில் அவா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம். போலீஸாா் அவரை தேடி வருகின்றனா். காவல் நிலையத்தில் இருந்து நிகழ்ந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.