மானூா் அருகே இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை (குட்கா) கடத்திச் சென்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் காவல் சரகம் உக்கிரன்கோட்டை அருகே காவல் உதவி ஆய்வாளா் முகைதீன் மீரான் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கடகனேரியை சோ்ந்த மன்மதன்(40) அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச்செல்வது தெரியவந்தது.
அவரை போலீஸாா் கைது செய்து, இரு சக்கர வாகனத்துடன், 5 கிலோ 205 கிராம் புகையிலைப்பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.