தென்காசி மாவட்டம் இலத்தூா் ஊராட்சியில் சுகாதாரப் பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஊராட்சி செயலரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.
செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இலத்தூா் ஊராட்சி செயலராக இருப்பவா் பண்டாரம்.
இப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடிநீா் தொட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து சுகாதாரப் பணிகளை சரிவர மேற்கொள்ளாததன் காரணமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, ஊராட்சி செயலா் பண்டாரத்தை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் உத்தரவிட்டாா்.