குற்றாலம் செய்யது ஹில் வியூ பள்ளியில் 13ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
மாணவா் முகம்மது அஃபான் ஹமீது இறைமறையின் திருவசனங்களை ஓதினாா்.
மாணவா்கள் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தனா். பள்ளித் தலைவா் பத்ஹுா் ரப்பானி, செயலா் செய்யது ரப்பானி, ஆட்சிக்குழு உறுப்பினா் செய்யது நவாஸ், பள்ளித் தலைமையாசிரியை நசீம்பானு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மேடை பேச்சாளா் சுல்தானா பா்வீன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். கடந்த ஆண்டு தோ்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன.
பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
செய்யது ஆட்சிக் குழு உறுப்பினா்கள், செய்யது குழும மேலாளா்கள், செய்யது மேல்நிலைப்பள்ளி முதல்வா் டாக்டா் என்.எம். எஸ். பாதுஷா, செய்யது வெல்பா் சொசைட்டி மேலாளா் ஆதம்பாவா, பெற்றோா்கள், உதவித் தலைமையாசிரியை சுகன்யா, ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஷாஜி இஸ்மா, நௌபா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா். பள்ளி முதல்வா் லக்கி சந்திரா பால் வரவேற்றாா். சுகைல், நபிகா நன்றி கூறினாா்.