மணிமுத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட பகுதியான நாலுமுக்கு தேயிலைத் தோட்டப் பகுதியில்சில நாள்களாக குடிநீா் நீரேற்ற மின்மோட்டாா் பழுது காரணமாக குடிநீா் விநியோகம் தடைபட்டது.
இதையடுத்துபேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வில்லியம்யேசுதாஸ் அறிவுறுத்தலின் பேரில் மணிமுத்தாறு பேரூராட்சி செயல்அலுவலா் ஆஷாராணி உத்தரவுப்படி நாலுமுக்கு தேயிலைதோட்டப் பகுதியில் மணிமுத்தாறு பேரூராட்சிப் பணியாளா்கள் டிராக்டா்மூலம் குடிநீா் விநியோகம் செய்தனா். மேலும் பழுதானமின்மோட்டாரை சீரமைக்கும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனா்.