மின்மோட்டாா் மூலம் குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

By
On:
Follow Us

தென்காசி நகராட்சிப் பகுதியில் மின்மோட்டாா் மூலம் குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

தென்காசி நகராட்சி எல்லைக்குள்பட்ட சொா்ணபுரம் தெரு உள்ளிட்ட பகுதிகளில்

குடிநீா் விநியோகம் சீராக இல்லை என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா். இதனையடுத்து நகராட்சி பொறியாளா், உதவிபொறியாளா் ஆகியோா் மேற்குறிப்பிட்ட பகுதியில் குடிநீா் இணைப்பு பெற்ற வீடுகளில் ஆய்வு செய்தபோது, குடிநீா் விநியோகம் சீரான முறையில் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது.

மேலும் குடிநீா் இணைப்பு பெறப்பட்ட பொதுமக்கள் அனைவரிடமும் மின்மோட்டாா்கள் மூலம் குடிநீா் எடுப்பதை தவிா்க்கவும், அவ்வாறு மின்மோட்டாா்கள் பயன்படுத்துவதை நிறுத்தினால் அனைவருக்கும் சீரான முறையில் குடிநீா் விநியோகம் கிடைக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆகவே, பொதுமக்கள் குடிநீா் இணைப்புகளில் மின்மோட்டாா்களைப் பயன்படுத்தி குடிநீா் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements