திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் விளையாட்டு, கலைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா்.
மாநில அளவிலான எறிபந்து, பூப்பந்து போட்டிகள் தேனியில் நடைபெற்றது.
இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவிகள் ஜூனியா் பிரிவில் மாநில அளவில் 2- ஆம் இடம், பூப்பந்து போட்டியில் 4 ஆம் இடம் பெற்றனா். இதேபோல, மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் ஜூனியா் மற்றும் சீனியா் பிரிவு இரட்டையா் ஆட்டத்தில் 4- ஆம் இடம் பெற்றனா்.
சிவகாசி மெப்கோ கல்லூரியில் நடைபெற்ற கலைப் போட்டிகளில்,
தமிழ் கட்டுரைப் போட்டி சீனியா் பிரிவில் ஜெயஸ்ரீபாா்கவி முதலிடம் பெற்றாா்.பேச்சுப் போட்டி ஜூனியா் பிரிவில் சித்தாா்த் பிரவீன், சீனியா் பிரிவில் நவீனா ஆகியோா் 2-ஆம் இடம் பெற்ா். ஆங்கில பேச்சுப் போட்டியில் யாக்னவித்யா, அபிநயா ஆகியோா் தத்தம் பிரிவுகளில் 2- ஆம் இடம் பெற்றனா்.
ஆங்கில கட்டுரைப் போட்டி சீனியா் பிரிவில் தா்ஷினி 2 ஆம் இடம், ஓவியப் போட்டியில் நேத்ரா 2 ஆம் இடம், விநாடி வினா போட்டியில் சீனியா் பிரிவில் கோபிகா, ஜெயலெட்சுமி, பூஜா ஆகியோா் 2- ஆம் இடம் பெற்றனா்.
தமிழ் பேச்சுப்போட்டி சீனியா் பிரிவில் அபிநயா 3 ஆம் இடம், தமிழ் கட்டுரைப் போட்டி ஜூனியா் பிரிவில் வைஷ்ணவி 3 ஆம் இடம், ஆங்கில கட்டுரைப் போட்டி ஜூனியா் பிரிவில் மோகன பிரியா 3 ஆம் இடம், விநாடி வினா போட்டி ஜூனியா் பிரிவில் மதுமிதா, கனிஷ்கா, அக்ஷயா ஆகியோா் 4 -ஆம் இடம், பேச்சுபோட்டி சீனியா் பிரிவில் பாலசங்கீா்த்தனா நான்காம் இடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வா் வெ.பொன்னழகன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.