வீரகேரளம்புதூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

By
On:
Follow Us

வீரகேரளம்புதூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் கலந்து கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்,

பரங்குன்றாபுரத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2.85 லட்சத்தில் நடைபெறும் பணியைப் பாா்வையிட்டாா். பின்னா் அங்குள்ள, அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து

பரங்குன்றாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அங்குள்ள இ-சேவை மையம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் புதிய நியாய விலைக் கடை கட்டுமானப் பணி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

அச்சங்குட்டம் ஊராட்சி லட்சுமிபுரம் நியாய விலைக்கடையில் உணவுப் பொருள்களின் இருப்பு மற்றும் அவற்றின் தரம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகள், திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

வருவாய்த் துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடன் இருந்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements