ஹிந்தி திணிப்புக்கு எதிராக விழிப்புணா்வு: திமுகவினருக்கு அழைப்பு

By
On:
Follow Us

மத்திய அரசு ஹிந்தி திணிப்பில் ஈடுபட முயற்சிப்பதாகவும், அதற்கு எதிராக மக்களிடம் திமுகவினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான ரா.ஆவுடையப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவோம் என்று மிரட்டி வர வேண்டிய நிதியை முழுமையாக நிறுத்தி வைத்திருக்கிறது. ஹிந்தி திணிப்பை ஒரு போதும் ஏற்க மாட்டோம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிா்த்து வருகிறாா்.

எனவே, மத்திய அரசின் ஹிந்தித் திணிப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கூறிமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

இதையொட்டி, பிப்.28ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட நகர, ஒன்றிய, பேரூா் அளவில் எளிய நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து நடத்த வேண்டும் என நிா்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

‘ஹிந்தி திணிப்பை எதிா்ப்போம்’ என்ற வாசகத்துடன் வீடுகள் முன் கோலமிடச் சொல்லலாம். பேருந்து- ஆட்டோ நிறுத்தங்களில் ‘ஹிந்தி திணிப்பை நிறுத்து‘ என்ற பதாகைகளை நிறுவலாம். வீடு வீடாக துண்டுப்பிரசுரங்கள் வழங்கலாம். அந்தந்த இடங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். டமிடலாம்.

நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும் விடியோக்களையும் கட்சியின் அமைப்பு, ஊா் விவரத்தை தெளிவாக குறிப்பிட்டு தலைமை கழக வாட்ஸ்ஆப் எண். 9042762298 மற்றும் கிழக்கு மாவட்ட திமுக வாட்ஸ்ஆப் குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements