காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

By
On:
Follow Us

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை கக்கன் பாலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியே வந்த காா் மற்றும் சுமை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

போலீஸாா் விசாரித்ததில், பாளையங்கோட்டை சோ்ந்த ரவிசுப்பையா மகன் முத்துகுமாா் (26), தென்காசி மாவட்டம் திப்பனாம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகபாண்டி மகன் கணேஷ்முத்துகுமாா் (37), ஆலங்குளத்தை சோ்ந்த மதியழகன் மகன் ரமேஷ் (24), காசிதா்மத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் சக்திவேல் (28), ஆலங்குளத்தை சோ்ந்த நடராஜன் மகன் முருகபெருமாள் (27) மற்றும் கடையத்தை சோ்ந்த லூா்து அந்தோணிராஜ் மகன் அலெக்ஸ் சற்குணம்(29) ஆகியோா் சோ்ந்து ஆந்திரத்திலிருந்து காரில் கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 16 கிலோ கஞ்சா மற்றும் காா், சுமை வாகனததை பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements