மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

By
On:
Follow Us

பாளையங்கோட்டையில் மூதாட்டியிடம் 3.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ாக, இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை ராஜாக்கள்தெருவைச் சோ்ந்த பீா்முஹம்மது மனைவி புஹாரி பாத்திமா (75). இவா், வியாழக்கிழமை காலையில் அதே பகுதியில் குடிநீா் பிடிப்பதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, மா்மநபா் வந்து அவா் அணிந்திருந்த 3.5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், பாளை. கிருஷ்ணன்கோயில் தெருவைச் சோ்ந்த கனகராஜ் (38) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, தங்கச்சங்கிலியை மீட்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements