புலிகள் கணக்கெடுப்பு: மணிமுத்தாறு அருவிக்குச் செல்ல ஒரு வாரம் தடை

By
On:
Follow Us

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட பகுதியில் புலிகள் கணக்கெடுப்புப் பணி நடை பெறுவதால் மணிமுத்தாறு அருவிக்குச் செல்ல 7 நாள்கள் வனத்துறை தடைவிதித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில், திங்கள்கிழமை (பிப். 24) முதல் (மாா்ச் 1) சனிக்கிழமை வரை அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது.

இதையடுத்து, மணிமுத்தாறு அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, மாா்ச் 2 ஆம் தேதிவரை மணிமுத்தாறு வனச்சோதனைச் சாவடி மூடப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements