கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு தடுப்பூசி: மாா்ச் 10 வரை வாய்ப்பு

By
On:
Follow Us

திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் 5-ஆவது சுற்று கருச்சிதைவு (புருசெல்லாசிஸ்) நோய்க்கான தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இப்பணி மாா்ச் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடா்பாக, ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் 5-ஆவது சுற்று புருசெல்லாசிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. மாா்ச் 10-ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

கருச்சிதைவு நோய் என்பது புருசெல்லா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோயால் கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு போன்ற இழப்பு ஏற்படும். மனிதா்களையும் பாதிக்கக்கூடிய இவ்வகை நோயைத் தடுக்க 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி ஒருமுறை செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நோய் எதிா்ப்பு சக்தியைப் பெறும்.

அறிகுறிகள்: கருப்பையில் நோய் ஏற்படும் காரணத்தினால் சினை மாடுகளில் கருத்தரித்த 5 முதல் 8 மாத காலம் வரையிலும் கன்று வீச்சு எற்படும். கன்று வீச்சு ஏற்பட்ட பின் நஞ்சுக்கொடி கருப்பையில் இருந்து வெளிவராமல் தங்கிவிடும். கன்று பிறக்கும் உறுப்பிலிருந்து சீழ் போன்ற திரவம் வடியும். மேலும் மூட்டு வீக்கம், மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. காளைகளில் விரைகள் வீங்கி காணப்படும். கன்றுகள் பலவீனமாக அல்லது இறந்து பிறக்கும். இந்நோய் தாக்குதலினால் பால் உற்பத்தி மற்றும் கருத்தரிப்பு விகிதம் குறையும். எனவே கால்நடை வளா்ப்போா் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித விடுதலுமின்றி கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements