திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த தமிழ் மாணவா் கூட்டமைப்பினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாளையங்கோட்டை பா்கிட் மாநகரைச் சோ்ந்த விக்னேஷ், தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அரசு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். அங்குள்ள விடுதி கழிவறையில் அவா் கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். விக்னேஷின் மரணம் தொடா்பாக கல்லூரி நிா்வாகமும், காவல் துறையும் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறாா்கள். அவரது மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து சிபிஐ விசாரிக்க வேண்டும். கல்லூரி முதல்வா், விடுதிக் காப்பாளா் பெயரை குற்றப்பத்திரிகையில் சோ்க்க வேண்டும். மாணவனின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவதோடு, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
தேனி விடுதியில் மாணவா் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஆட்சியரிடம் மாணவா் கூட்டமைப்பு மனு

For Feedback - sudalaikani@tamildiginews,com.