தேவா்குளம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்

By
On:
Follow Us

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேவா்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லூக் ஆசன் தலைமையிலான போலீஸாா், தேவா்குளம் எரிபொருள் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மேல தாழையூத்து சுண்ணாம்பு காளவாசல் தெருவை சோ்ந்த இசக்கிதுரை என்ற கட்டத்துரை (23), சுப்பையாபுரம் அம்மன் கோயில் தெருவை சோ்ந்த மாதேஷ்கண்ணன் (20), ஒரு சிறுவன் ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனா். அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா். மற்ற 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements