நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டின் முன் பெண் செய்த செயல் வைரல்

By
On:
Follow Us

Last Updated:

தவெக தலைவர் விஜய், இன்று ராயப்பேட்டையில் நடந்த இஃப்தார் நோன்பில் பங்கேற்றிருந்த வேளையில், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் வெளியே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அவரை சந்திக்க காத்திருந்தார்.

News18News18
News18

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டு வாசலில், சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காலையில் இருந்து விஜய்யை பார்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டு காத்திருந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக தலைவர் விஜய், இன்று சென்னை ராயப்பேட்டையில் தவெக சார்பாக நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தலையில் தொப்பியுடன் வந்த விஜய், இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கஞ்சி அருந்தி இஃப்தார் நோன்பை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற, சிறப்புத் தொழுகையில் பங்கேற்று, அவரும் தொழுகை செய்தார்.

இதனைத் தொடர்ந்து நோன்பு திறப்பு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பின்பற்றி, மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றி இங்கு இருக்கும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும், என் அன்பான அழைப்பை ஏற்று, அனைவரும் வந்து பங்கேற்றதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று பேசினார்.

இதையும் படியுங்கள் : இலங்கை கடற்படையினர் கைது செய்த 14 மீனவர்கள்.. வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இதேசமயம், இந்த நிகழ்ச்சியில் அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு குவிந்த விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் நிகழ்ச்சி தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து உள்ளே சென்றனர். மேலும், அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் வெளியே காத்திருக்க  வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

தவெக தலைவர் விஜய், ராயப்பேட்டையில் நடந்த இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்க, அவரது நீலாங்கரை வீட்டு வாசலில் சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காலையில் இருந்து விஜய்யை பார்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டு காத்திருந்தார்.

அந்த பெண் கை முழுவதும் மருதாணியால் “சிஎம் விஜய்” என்றும், “விஜய் அண்ணாவின் உடன் பிறந்த தங்கச்சி நான்” என்றும் எழுதிக்கொண்டு, விஜய் நடித்த படங்களின் பாட்டுகளை பாடியும், நடனம் ஆடியும் வந்தார். உடனே அங்கிருந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று அந்த பெண்ணை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements