திருடன் நல்லவனாக மாறினால் அவனை மன்னிக்க மாட்டீர்களா? அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் பொன்னையன் பதில்

By
On:
Follow Us

Last Updated:

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் பொன்னையன், திருடன் நல்லவனாக மாறினால் மன்னிக்க மாட்டீர்களா? அதுபோல பாஜகவினர் நல்லவர்களாக மாறலாம் எனக் கூறினார்.

News18News18
News18

திருடன் நல்லவனாக மாறினால் அவனை மன்னிக்க மாட்டீர்களா, அதுபோல பாஜகவினர் நல்லவர்களாக மாறலாம், மும்மொழிக் கொள்கையை திணிக்காமல் இருக்கலாம், பொறுத்திருந்து பாருங்கள் என அதிமுக – பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பொன்னையன்  பதில் அளித்துள்ளளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவுடன் கூட்டணியே கிடையாது எனக் கூறிய அதிமுக தற்போது கூட்டணி அமைத்துள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்த அவர், அதுதான் உலக அரசியல், இந்திய அரசியல், நாட்டின் அரசியல் என பதில் அளித்தார்.

பாஜக கூட்டணியால் தோற்றதாக அதிமுகவினர் கூறியது பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அதில் சூழல், கொள்கை அரசியலில் மாறும், திருடன் நல்லவனாக மாறி, ஒழுக்கமானவனாக மாறி அற்புதமானவனாக மாறினால் அவனை மன்னிக்க மாட்டீர்களா? அதுபோல பாஜகவினர் நல்லவர்களாக மாறலாம். மும்மொழிக் கொள்கையை திணிக்காமல் இருக்கலாம், ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கலாம் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

பாஜக மூழ்கும் கப்பல் என்ற விமர்சனத்திற்கு, மூழ்கும் கப்பலாக இருந்தாலும் அதிசயங்கள் நடக்கலாம் அல்லவா எனவும் பொன்னையன் கருத்து தெரிவித்தார். ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி குறித்த கேள்விக்கு பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுங்களேன், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் தான் தமிழ்நாட்டின் மானம் காக்கப்படும் என ஸ்டாலினிடம் பத்திரிக்கையாளர்கள் எடுத்துக் கூறுங்கள் என பொன்னையன் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/Breaking and Live Updates/

திருடன் நல்லவனாக மாறினால் அவனை மன்னிக்க மாட்டீர்களா? அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் பொன்னையன் பதில்

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements