ஆனால், சில காரணங்களுக்காகப் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இந்திய வீரர் ராகேஷ் சர்மா 1984-ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றார். அதற்குப் பிறகு, 41 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் செல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற உள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் “ஆக்சியம் 4” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இஸ்ரோவுக்கும் குறிப்பிட்ட சில பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ககன்யான் திட்டத்திற்கு இந்த “ஆக்சியம் 4” திட்டத்திலிருந்து பெறப்படும் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணத்தின் போது, சுபான்ஷு சுக்லாவை தவிர்த்து, போலந்து, ஹங்கேரி மற்றும் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 4 விண்வெளி வீரர்கள் செல்கின்றனர். இந்தத் திட்டத்தின் கமாண்டராக விண்வெளி வீரர் விட்சன் பணியாற்ற உள்ளார். இந்தப் பயணத்தின் போது, சுமார் 60 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இன்றைக்கு அவர்கள் புறப்பட்டுச் செல்வதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாகப் பயணம் நாளை ஒத்திவைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய வீரர் சுபாஷ் சுக்லா தனது விண்வெளிப் பயணத்தின் போது இட்லி, கேரட் அல்வா, பருப்பு அல்வா உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய வீரர் விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்கிறார். இதனை இஸ்ரோ சற்று உணர்வுபூர்வமாக மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில், அவர் வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவுகளைக் கொண்டு செல்ல உள்ளார்.
அதற்கு ஏற்றாற் போல் பதப்படுத்தும் முறைகளை இஸ்ரோ செய்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலில் நிறைய மசாலா பொருட்கள் கொண்டு செல்வதாக இருந்தது, ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, அல்வா மற்றும் இட்லியை மட்டும் சுபாஷ் சுக்லா கொண்டு செல்வதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சர்வதேச விண்வெளிப் பயணத்திற்குச் செல்லும் வீரர்களுக்கு நாசா பிஸ்கட்டுகள், இனிப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், நீண்ட நாள் பரிசோதனைக்குப் பிறகு, இஸ்ரோவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் இணைந்து விண்வெளிக்கு ஏதுவான இந்திய உணவுகளைப் பதப்படுத்தும் முறைகளைக் கண்டுபிடித்துள்ளது.
June 10, 2025 8:44 PM IST