ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது – News18 தமிழ்

By
On:
Follow Us

தென்காசி
யில் விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள சாயமலை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவர், தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது தாயார் கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தார். இதனால், வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்நிலையில் வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் மைதீன் பட்டாணி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அழகுராஜா, இதுகுறித்து திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

விளம்பரம்

ALSO READ |  
பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

இதையடுத்து போலீஸாரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திருவேங்கடம் வட்டாட்சியரிடம் வழங்கினார். பணத்தை வட்டாட்சியர் பெற்றுக்கொண்டது தெரிய வந்ததும் அவரை டி.எஸ்.பி மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து தொடர்ந்து விடிய விடிய நடந்த விசாரணையில் அதிகாலை வரை தொடர்ந்து பின்னர் அவரை கைது செய்து திருநெல்வேலிக்கு அழைத்து சென்றனர். வாரிசு சான்றிதழ் வழங்க லட்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

செய்தியாளர் : ச.செந்தில்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements