வாட்ஸ்அப் அப்ளிகேஷன் மூலமாக தொடர்ந்து மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சந்தேகத்திற்குரிய வாட்ஸ்அப் அக்கவுண்டுகள் மற்றும் புகார் வழங்கப்பட்ட வாட்ஸ்அப் அக்கவுண்டுகளை நிறுவனம் தடை செய்து வருகிறது. இது குறித்த சில முக்கியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலக அளவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மெசேஜிங் அப்ளிகேஷன் எதுவென்று கேட்டால் நாம் அனைவரும் உடனே வாட்ஸ்-அப் என்று தான் சொல்லுவோம். அந்த அளவுக்கு வாட்ஸ்-அப் இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறருடன் சாட் செய்வதற்கு மட்டுமல்லாமல், போட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்கள் போன்றவற்றை அனுப்பவும், பிறருக்கு பணம் அனுப்பவும் கூட தற்போது வாட்ஸ்-அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து வாட்ஸ்அப்பில் ஏராளமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் இவ்வளவு பிரபலமாக இருப்பதால் மோசடிக்காரர்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி மோசடி சம்பவங்களை நடத்திவருகின்றனர். நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நம்முடைய பணத்தை மட்டுமல்லாமல் நிம்மதியையும் சேர்த்து இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
இதனை முன்கூட்டியே கணித்து வாட்ஸ்-அப் அது மாதிரியான அக்கவுண்டுகளை பிளாக் செய்வது வழக்கம். அது மட்டுமல்லாமல் புகாரின் பெயரிலும் நடவடிக்கை எடுத்து வாட்ஸ்-அப் அக்கவுண்ட்களை நிறுவனம் முடக்கும். அந்த வகையில் கடந்த மாதத்தில் மட்டுமே தோராயமாக 84 லட்ச வாட்ஸ்-அப் அக்கவுண்டுகள் இந்தியாவில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் சேவைகளை மோசடிக்காகவும், தவறான செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக வாட்ஸ்-அப்பின் தாய் நிறுவனமான மெட்டா இந்த நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது.
மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகள் குறித்து வந்த பயனர் புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து இந்த அக்கவுண்டுகள் முடக்கப்பட்டது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 16.6 லட்சம் அக்கவுண்டுகள் முன்கூட்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடக்கப்பட்டது. மீதமுள்ள அக்கவுண்டுகள் விசாரணை அடுத்து முடக்கப்பட்டன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 10,703 புகார்கள் வாட்ஸ்அப்பிற்கு கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள் :
ஜியோ வழங்கும் அற்புதமான சலுகை: ரூ.101 ரீசார்ஜில் அன்லிமிடெட் டேட்டா!
இதில் 93 புகார்களுக்கு மட்டுமே உடனடி ஆக்ஷன் எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் பெரும்பான்மையாக மோசடி சம்பவங்கள் குறித்தே இருந்துள்ளன. பின்வரும் காரணங்களுக்காக வாட்ஸ்-அப் அக்கவுண்டுகள் தடை செய்யப்படலாம்:-
*அதிக எண்ணிக்கையிலான மெசேஜ்கள் அல்லது ஸ்பேமை அனுப்புதல்
*மோசடி அல்லது தவறான தகவல்களை அனுப்புவதில் ஈடுபடுதல்
*விதி மீறுதல் அல்லது சந்தேகத்திற்குரிய விஷயங்களில் பங்கு பெறுதல்
இந்த நடவடிக்கையை எடுத்ததன் மூலமாக பயனர் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் எந்த அளவுக்கு முன்னுரிமை வழங்குகிறது என்பது எடுத்துக்காட்டப்படுகிறது.
.