‘2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே’… ரயில்களில் பயன்படுத்தப்படும் போர்வையை துவைப்பதில் மெத்தனம்!

By
On:
Follow Us

ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் பயன்படுத்தப்படும் கம்பளி போர்வைகள் மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரயில்வே அளித்துள்ள பதில்கள் என்ன? இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்….

ஒரு பகுதியிலிருந்து வேறு இடத்துக்கு அல்லது தொலைதூரத்துக்கு செல்லும்போது, அந்தப் பயணம் வசதியானதாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அந்த வகையில், பெரும்பாலான நடுத்தர மக்களின் தேர்வாக ரயில் அமைகிறது. அதிலும், எந்தவொரு தொந்தரவும் இல்லாமல், சொகுசாக பயணம் செய்ய குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறோம். இரவு நேரத்தில் செல்லும் ரயில்களில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தலையணை, படுக்கை விரிப்பு, கம்பளி போர்வை ஆகியவற்றை ரயில்வே நிர்வாகம் வழங்குகிறது. ஆனால், இவை அனைத்தும் சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

விளம்பரம்

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், ரயில்வே துறையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ரயில்வே அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் துப்புரவு மேலாண்மைப் பிரிவு அதிகாரி ரிஷி குப்தா பதில் அளித்துள்ளார்.

அதில் அவர், ரயில்களில் வழங்கப்படும் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் ஆகியவை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், துவைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கம்பளி போர்வைகள் மாதத்துக்கு ஒரு முறை அல்லது அதிகபட்சமாக மாதத்துக்கு இரு முறை துவைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தொலைதூர ரயில்களில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களிடம் கேட்டபோது, ஒவ்வொரு முறை பயன்படுத்தியபிறகும், போர்வைகள் மடித்து வைக்கப்படுவதாகவும், அதில், கறை படிந்திருந்தாலோ அல்லது துர்நாற்றம் வீசுவதாக இருந்தாலோ துவைப்பதற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

விளம்பரம்

அதேநேரம், ரயில்களில் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை வழங்குவதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இவை அனைத்தும் ரயில் கட்டணத்துக்குள்ளேயே அடங்குவதாகவும் விளக்கம் அளித்தனர்.

அதேநேரம், கரீப் ரதம், துரந்தோ போன்ற ரயில்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி, படுக்கைகளைத் தனியாக வாங்கிக் கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் பயன்படுத்தப்படும் போர்வை உள்ளிட்டவற்றை துவைப்பதற்காகத் துறைரீதியாக 46 இடங்களில் சலவை மையங்கள் செயல்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதில் உள்ள பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.

விளம்பரம்

இதேபோல, நாடு முழுவதும் தனியார் சார்பில் 25 சலவை நிலையங்கள் செயல்படுகின்றன. அதாவது, ரயில்வேவுக்குச் சொந்தமான நிலத்தில், சலவை இயந்திரங்களைப் பொருத்தி, அதனை செயல்படுத்தும் பணிகளை தனியார் நிறுவனங்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்கின்றனர்.

Also Read |
தவெக மாநாடு.. விஜய் பேசப்போவது இதுதானாம்.. ‘ஹின்ட்’ கொடுத்த நிர்வாகிகள்!

முன்னதாக, ரயில்வே துறையில் படுக்கை விரிப்புகளைச் சலவை செய்வதிலும், பராமரிப்பதிலும் ரயில்வே துறை மெத்தனமாக இருப்பதாக 2017-ஆம் ஆண்டு தலைமைத் தணிக்கையாளர் வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சில நேரங்களில் பயணிகளுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தலையணை உறையை வடக்கு ரயில்வே வழங்கியதாகவும் அதில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

விளம்பரம்

இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி, கம்பளிப் போர்வையைத் துவைப்பதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements