120 கி.மீ வேகத்தில் காற்று… வங்கக் கடலில் மிரட்டும் டானா புயல்.. வானிலை மையம் தகவல் – News18 தமிழ்

By
On:
Follow Us

மத்திய கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து “டானா” புயலாக உருவானது.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வளிமண்டல சுழற்சி, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணிக்கு ‘டானா’ புயலாக மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல், ஒடிசாவின் பாரதீபுக்கு தென்கிழக்கே 560 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கம் சாகர் தீவில் இருந்து தென்-தென்கிழக்கே 630 கி.மீ தொலைவிலும், மற்றும் வங்காளதேசம் கெபுபாராவுக்கு தெற்கு-தென்கிழக்கே 630 கி.மீ தொலைவிலும் உள்ளது.

விளம்பரம்

இது நாளை அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்று, நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலைக்குள் பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் நேரம் மணிக்கு 100-110 கி.மீ வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

.

  • First Published :

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements