மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் சித்திக். மலையாள நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கடந்த மாதம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து துணிச்சலாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளியே பேச தொடங்கினார்.
அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு திரைப்பட வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாலியல் ரீதியில் சித்திக் துன்புறுத்தியதாக பெண் ஒருவர் திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தில் சித்திக் முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். சித்திக்கை கைது செய்ய உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் சித்திக் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தெரிவித்தார். வழக்கு பதிவான நிலையில் தனது பேஸ்புக் கணக்கை நடிகர் சித்திக் மூடிவிட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
பின்பு வாதிட்ட சித்திக் தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தார்.
இதையும் படியுங்கள் :
BSNL Logo: பிஎஸ்என்எல் லோகோ, டேக்லைன் மாற்றம்.. 7 புதிய திட்டங்கள் அறிமுகம்!
இவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. மேலும் சித்திக்கை கைது செய்ய விதித்த இடைக்காலத் தடையையும் நீட்டித்து உத்தரவிட்டது.
.