பாபா சித்திக் கொலையில் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு! தகவல் தருப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்த என்.ஐ.ஏ!

By
On:
Follow Us

மும்பையில் கடந்த அக்டோபர் 12ம் தேதி இரவு முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவருமான பாபா சித்திக் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

சல்மான் கானுடனான நட்பு காரணமாக, சித்திக் சொல்லப்பட்டதாகவும், குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தான் கொலைக்கு காரணம் எனவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயிக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

விளம்பரம்

அன்மோல் பிஷ்னோய் மீது ஏற்கெனவே 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2022- ஆம் ஆண்டில் பஞ்சாப் பாடகர் சித்து மோசேவாலா கொலை வழக்கிலும் இவர் தேடப்படுகிறார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடிகர் சல்மான் கான் வீட்டின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மும்பை போலீசாரால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

காலையில் மாதுளை சாறு குடிப்பதால் கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள்.!


காலையில் மாதுளை சாறு குடிப்பதால் கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள்.!

தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் அன்மோல் பிஷ்னோய், போலி பாஸ்போர்ட் மூலம் கடந்த ஆண்டு கென்யாவுக்கு தப்பியோடிய பின்னர் கனடாவில் தஞ்சம் புகுந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் :
திருவெற்றியூர் பள்ளி ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்படவில்லை – காவல்துறை விளக்கம்

இந்த நிலையில், அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது.

.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements