விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், மாநாட்டுக்கு முந்தைய நாளே விஜய் மாநாட்டுத் திடலுக்கு வந்து கேரவனில் தங்கியிருக்கிறார்.
மாநாட்டுக்கு விஜய் எப்போது எப்படி வரப்போகிறார் எனும் எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது. விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்தோ அல்லது பனையூர் அலுவலகத்திலிருந்தோ கிளம்பி புதுச்சேரியை எட்டி அங்கே ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து நாளை மாநாட்டுத் திடலுக்கு வருவதாகத்தான் தகவல் வெளியாகியிருந்தது.