இந்தியாவின் மிகப்பெரும் தனியார் வனவிலங்கு மறுவாழ்வு மையமான வந்தாரா சேர்ந்த வனக்காவலர்கள் பங்கேற்கும் சாகச நிகழ்ச்சியை மும்பையில் வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் மகனும், கொடை வள்ளலுமான ஆனந்த் அம்பானியின் சீரிய தொலைநோக்கு பார்வையில் வந்தாரா வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் குஜராத்தில் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 1500 வகையைச் சேர்ந்த 78 ஆயிரம் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவைகளில் யானைகள், புலிகள், ஊர்வன மற்றும் இதர பாலூட்டி விலங்கினங்கள், பறவைகள் உள்ளிட்டவை அடங்கும். வந்தாராவில் மட்டும் 200 யானைகள் ஆபத்தான நிலைமையிலிருந்து மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 30 யானைகள் சர்க்கஸ் நிறுவனங்களில் இருந்து மீட்கப்பட்டவை.
யானைகளுக்கான உலகின் மிகப்பெரிய மருத்துவ வசதிகள் இங்கே உள்ளன. மேலும் பல விலங்குகள் குறித்து தீவிர ஆராய்ச்சிகள் இந்த மையத்தில் நடத்தப்படுகிறது. அவைகளுக்கான சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், சிறப்பு ஐசியு அமைப்புகள், மனிதர்கள் அல்லாத ரோபோ சிகிச்சை வசதிகள் என ஏராளமானவற்றை வந்தாராவில் ஆனந்த் அம்பானி அமைத்திருக்கிறார்.
இதற்காக அவருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற அவரது திருமணத்தின் போது வந்தாரா குறித்த தகவல்கள் உலகம் முழுவதும் மிகுந்த கவனத்தை பெற்றன. இந்த நிலையில் வந்தாராவில் உள்ள வன காவலர்கள் பங்கேற்க கூடிய விலங்குகள் மீட்பு சாகச நிகழ்ச்சிகள் மும்பையில் 30ஆம் தேதி வரை நடைபெறும் என வந்தாரா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள ஹாமலேஸ் ஒண்டர்லேண்ட் கார்னிவலில் இந்த சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வனவிலங்குகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம். மும்பை பந்த்ரா குர்ல வளாகத்தில் இந்த ஹாமலேஸ் ஒண்டர்லேண்ட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 19ஆம் தேதி தொடங்கிய இந்த திருவிழா 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
.