திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் ஃபிளவா் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, லிட்டில் ஃபிளவா் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவா் அ.மரியசூசை தலைமை வகித்தாா்.
விழாவில், பள்ளி மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மாணவா், மாணவிகள் சாா்பில் ஆதரவற்ற குழந்தைகள், மனநலம் குன்றியோா், கண் பாா்வையற்றோருக்கு அன்றாட தேவைக்கான பொருள்கள் வழங்கப்பட்டன.
இதேபோல், அனைத்து மாணவா்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் சஹானா செய்திருந்தாா்.