சட்டென கவிழ்ந்த கண்டெய்னர் லாரி.. அப்பளம் போல் நொருங்கிய கார்.. ஆறு பேர் பலியான கோர சம்பவம்

By
On:
Follow Us

கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூருவில் இருந்து துமகூரு நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. எதிர் திசையில் சந்திரம் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் பெங்களூரு சென்று கொண்டிருந்தார்.

நெலமங்களா என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, எதிரே வந்த கார் மீது கவிழ்ந்தது. இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீரிழிவு நோயாளிகள் ஏன் பார்லி சாப்பிட வேண்டும் என்பதற்கான 5  காரணங்கள்.!


நீரிழிவு நோயாளிகள் ஏன் பார்லி சாப்பிட வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்.!

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் மீட்புப் படையில், காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காரில் பயணித்த இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விளம்பரம்

விபத்து குறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநரின் அலட்சியத்தால் விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements