அம்பாசமுத்திரம் ஊா்க்காடு பகுதியில் குடியிருப்பவா்கள் நீண்ட நாள்களாக பட்டா கோரி வந்த நிலையில், தமிழக முதல்வரின்அறிவிப்பைத் தொடா்ந்து பட்டா வழங்குவதற்கான முன்னோடி முகாம், அம்பாசமுத்திரம் நகராட்சி திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் காஜா ஹரிபுன் நவாஸ், நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன், துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், உறுப்பினா்கள் ஜோதிகலா, ராமசாமி மற்றும் வருவாய்த் துறை, நகராட்சி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.