இதையடுத்து விசாரணை மேற்கொண்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சிசிபிஏ), பயிற்சி நிறுவனம் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதை உறுதி செய்ததுடன் இந்த நிறுவனம் 50-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பாடத்தையே எடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் பயிற்சி நிறுவனத்தில் எடுத்து படித்த குறிப்பிட்ட பாடத்திட்டத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டியது நுகர்வோரின் உரிமையாகும்.
இதற்கிடையில், அந்த நிறுவனம் பெயர் மற்றும் முகவரி அச்சிடப்பட்ட குறிப்பேட்டில் ஐஏஎஸ் என பயன்படுத்தியது, மேலும் அந்த நிறுவனத்தை வைத்திருப்பவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறும் செயல் எனக் குறிப்பிட்டு, பயிற்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக ரூ.2 லட்சம் அபராதம் செலுத்துமாறும், தவறான விளம்பரங்களை உடனடியாக நீக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.