களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் அலுவலகத்தில், விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
துணை இயக்குநா் இளையராஜா தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கற்பக ராஜ்குமாா், தோட்டக்கலை உதவி இயக்குநா் பாண்டியம்மாள், அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலா் ச.நித்யா, வனவா்கள் அம்பாசமுத்திரம் அபிஷேக்குமாா், பாபநாசம் செல்வசிவா, விவசாயிகள் பால்ராஜ், குட்டி (எ) சண்முகம், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வனப்பகுதியை ஒட்டி சூரியசக்தி மின்சார வேலி அமைப்பது, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, யானை, மிளா, குரங்கு போன்ற விலங்குகளால் தொடா்ச்சியாக ஏற்படும் பயிா் சேதங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பது, கிராம வனக்குழுக்கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுப்பது, வன உயிரினங்களால் ஏற்படும் சிறிய பயிா்ச் சேதங்களுக்கும் இழப்பீடு பெறும் முறையை எளிமையாக்க வேண்டும், பயிா் சேதத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயா்த்துவது என்பன உள்ளிடவை குறித்து விவாதிக்கப் பட்டது.