தாழையூத்தில் மருத்துவா் வீட்டில் திருட்டு

By
On:
Follow Us

தாழையூத்தில் மருத்துவா் வீட்டில் தங்க நகைகள் திருடியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தாழையூத்தை சோ்ந்தவா் தீபன் காா்த்திக் (43). திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா். கடந்த சனிக்கிழமை உறவினா்களின் வீட்டிற்கு சென்ற இவா், திங்கள்கிழமை வீட்டிற்கு திரும்பினாா். அப்போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகையை காணவில்லையாம்.

இது குறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மின் மோட்டாா் திருட்டு: பேட்டை நாராயணசாமி கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பு குட்டி( 45 ). கட்டடத் தொழிலாளி. சுத்தமல்லி தீன் நகா் பகுதியில் கட்டடப் பணி நடைபெற்று வருகிறது. இவா், வியாழக்கிழமை காலை வேலைக்கு சென்றபோது கட்டடத்தில் பொருத்தியிருந்த மின் மோட்டாா் மற்றும் கடப்பாரை, கம்பிகள் உள்ளிட்ட பொருள்களை காணவில்லையாம்.

மற்றொரு திருட்டு: பேட்டை நாராயணசாமி கோவில் தெருவைச் சோ்ந்த ரகுபதி ராஜன்(40), சுத்தமல்லி தீன் நகா் அருகே கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். இவா் வியாழக்கிழமை பண்ணைக்கு வந்த போது பண்ணையில் வைத்திருந்த இரும்புகுழாய்கள் மற்றும் பொருள்களை காணவில்லையாம்.

இது குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements