நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு! அமைச்சர் நேரு

By
On:
Follow Us

திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் சுற்றுவட்டார மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்கள், நீா்நிலைகளில் கேரள மாநில கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து மா்மநபா்கள் கொட்டினா். கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

அவை, திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதற்கான ரசீதுகளும் கைப்பற்றப்பட்டன. இதைகொட்டியவா்கள் மீது கடும் நடவடிக்கை எ டுக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினா்.

இதற்கிடையே தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கேரள மாநில குப்பைகளைத் திருப்பி எடுத்துச் செல்ல உத்தரவிட வலியுறுத்தப்பட்டது. அதன்பேரில், கேரள அரசு கழிவுகளை மீண்டும் எடுத்துச் சென்று மேலாண்மை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் கேரள மாநில வருவாய்த்துறையினா், சுகாதாரத்துறையினா் நேரில் வந்து ஆய்வு செய்து 16 லாரிகள் மூலம் கழிவுகளை திருப்பி எடுத்துச் சென்றனர்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements