திருநெல்லையில் வெள்ளிக்கிழமை (டிச.20) நடைபெறவிருந்த அஞ்சல் துறையின் குறைதீா்க்கும் கூட்டம் டிச. 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் க.செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் துறையின் சாா்பில் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம் இன்று (டிச. 20) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கூட்டம் இம் மாதம் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
அக்கூட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி வாடிக்கையாளா்கள் பங்கேற்று தபால் பணிகள் குறித்த குறைகள், தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவா்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.