திருநெல்வேலியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வீரவநல்லூா் மேலபுதுக்குடியைச் சோ்ந்தவா் குருபாதம் மகன் டேவிட் (32). இவா், செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது, அங்கு வந்த மா்மநபா்கள் அவரிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனா்.
அருகிலிருந்தவா்கள் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.