Last Updated:
இது மாணவிகளை மனரீதியாக பாதிக்கப்படுத்தியுள்ளது என்றும், இது மன ரீதியான வன்கொடுமை என்றும் பெற்றோர்கள் புகாரளித்துள்ளனர்.
தேர்வுகள் முடிந்ததை கொண்டாடிய 10ஆம் வகுப்பு மாணவிகளை தங்கள் சட்டைகளை கழட்டி வீட்டிற்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வு நிறைவடைந்தது. தேர்வு முடிந்ததையடுத்து, மாணவிகள் ‘பேனா தினத்தை’ கொண்டாடியுள்ளனர். அப்போது மற்ற மாணவிகள் சட்டையில் அவர்களின் பெயரை எழுதியும், வாசகங்கள் எழுதியும் கொண்டாடியுள்ளனர்.
அதை பார்த்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவிஸ்ரீ, தங்கள் பள்ளியின் பெயர் இதனால் பாதிக்கப்படும் எனக்கூறி, மாணவிகளின் சட்டைகளை களைந்து வீட்டிற்கு செல்லச் சொல்லியுள்ளார். இதன் காரணமாக மாணவிகளும் தங்கள் சட்டைகளை களைந்துள்ளனர்.
இதையும் படிக்க: தாஜ்மஹாலை அதிகாலை 4 மணிக்கு பார்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி… வைரலாகும் பதிவு
பலரும் ஆண் ஆசிரியர்கள் முன்னிலையிலும் தங்கள் சட்டைகளை களைய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பல மாணவிகள் பள்ளியிலேயே இருந்துள்ளனர். 20 மாணவிகள் மட்டும் வேறு சட்டை இருந்ததால், அதை வைத்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மீதம் இருந்த 80 மாணவிகளும், பிளேசர்கள் மட்டுமே அணிந்து தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளனர். “இது மாணவிகளை மனரீதியாக பாதிக்கப்படுத்தியுள்ளது என்றும், இது மன ரீதியான வன்கொடுமை” என்றும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சில மாணவிகள் அந்த பள்ளிக்கு மீண்டும் செல்வதற்கும் பயப்படுகிறார்கள் என பெற்றோர்கள் கூறுகிறார்கள்.
இந்த புகாரையடுத்து, காவல்துறை தரப்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Ranchi,Jharkhand
January 12, 2025 11:30 AM IST
80 பள்ளி மாணவிகளை மேல்சட்டையை கழற்றி வீட்டுக்கு அனுப்பிய தலைமை ஆசிரியர் – ராஞ்சியில் அதிர்ச்சி