இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில்,
‘முதலாவதாக, நீட் தேர்வு மூலமாக முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆஃப் சதவீதத்தை மோடி அரசு குறைக்கிறது.
இப்போது மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான விதிமுறைகளை தளர்த்துகிறது.
தரமான மருத்துவக் கல்வி என்ற நோக்கத்துடன் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு 2020 செப்டம்பர் மாதம் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது தேசிய மருத்துவ ஆணையம் எடுக்கும் சில நடவடிக்கைகள் குழப்பத்தைத் தருகின்றன’ என்று கூறியுள்ளார்.