Last Updated:
கடன் அளித்த விஷாலும் அவரின் தாய் ரேணுகாவும் பலமுறை திரும்பக் கேட்டுள்ளனர்.
50 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத பழங்குடியின பெண்ணின் 17 வயது மகளை கடத்தி, திருமணம் செய்த இளைஞர் மற்றும் அவரின் தாய் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், விஷால் தவாலி என்பவரிடம் மருத்துவ செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். வாங்கிய கடனை அந்த பெண் திரும்ப செலுத்த முடியாமல் அவர் கடும் அவதியடைந்து வந்துள்ளார். இந்நிலையில், கடன் அளித்த விஷாலும் அவரின் தாய் ரேணுகாவும் பலமுறை திரும்பக் கேட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் பணத்தை வாங்கி திரும்ப செலுத்த முடியாத பெண்ணின் 17 வயது மகளை கடந்த செப்டம்பர் மாதம் கடத்திய விஷால் சிறுமியை கட்டாய திருமணம் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவருக்கு பாலியல் ரீதியாகவும் தொல்லை அளித்துள்ளார். மேலும் விருப்பம் இல்லாமல் சிறுமியை விஷால் திருமணம் செய்து பாலியல் ரீதியாகவும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் போலீசார், விஷால், அவரின் தாய் ரேணுகா மற்றும் மேலும் 8 பேர் மீது போக்சோ சட்டம், எஸ்சிஎஸ்டி ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.50 ஆயிரம் கடனுக்காக 17 வயது சிறுமியை இளைஞர் கட்டாய திருமணம் செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
January 20, 2025 4:10 PM IST
தாய் வாங்கிய ரூ.50 ஆயிரம் கடனுக்காக 17 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்… கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!