Last Updated:
8-ஆவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது கடைநிலை ஊழியர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஊதிய உயர்வு இருக்கும்.
8-ஆவது ஊதிய குழு பரிந்துரைத்த சம்பள மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்ப ஊதியக்குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுடைய சம்பளங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது 2016 ஜனவரி 1ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட 7-ஆவது ஊதிய குழு அமைத்த பரிந்துரையின் அடிப்படையில் சம்பளங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. 10 ஆண்டுகளில் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் முடிவுக்கு வரும். அதற்கு முன்பாக எட்டாவது ஊதிய குழு பரிந்துரைத்த சம்பள மாற்றங்கள் மத்திய அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
8-ஆவது ஊதியக்குழு அடிப்படை சம்பளம் முதல் பல்வேறு சம்பளத்திற்கு மாற்றங்களை பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசு ஊழியர் ஊழியர்கள் உள்ளனர். இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் அளித்த பேட்டியில், 8-ஆவது ஊதியக்குழு அளித்துள்ள பரிந்துரைகள் ஏழாவது ஊதியக்குழு பொறுப்பு காலம் முடியும் முன்னரே நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் 8-ஆவது ஊதிய குழு பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து கணக்கிடப்படும் என்றும் 2026 பிப்ரவரி மாதம் மாற்றியமைக்கப்பட்ட ஊதியத்தை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைத்ததன் அடிப்படையில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதனை குறைந்தது 51 ஆயிரத்து 480 ரூபாயாக உயர்த்த வேண்டும் என 8-ஆவது ஊதிய கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிக்க: 186 விழுக்காடு உயரும் ஊதியம்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்
இதேபோன்று பல்வேறு துறைகளில் ஊதிய உயர்வு குறித்த பரிந்துரைகள் மத்திய அரசுக்கு செய்யப்பட்டுள்ளன. 8-ஆவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது கடைநிலை ஊழியர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஊதிய உயர்வு இருக்கும்.
January 21, 2025 2:33 PM IST